தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கொக்குகுளம் என்ற கிராமத்தில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் போது வெடி விபத்தில் சத்தீஸ்வரன் என்பவர் உடல் சிதறி உயிரிழப்பு.
அவரது மனைவி ராமலட்சுமி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ், 10 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 68 வாய்க்கால்களில் 689 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகளை அமைச்சர் திரு. மெயநாதன் இன்று தொடங்கி வைத்தார்

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை ஆட்சியர் திருமதி. சாந்தி இன்று தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 58,477 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர் திரு. சிவசங்கர் தொடங்கி வைத்தார்

மதுரை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்ட மோனிஷா ஷீலாவிடம் விசாரணை நடக்கிறது..
கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 6 கிலோ மெத்தபெட்டமைன் குப்பையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

சென்னை பட்டாபிராம் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் மிட்டாய் கார்த்தி என்பவர் கைது.
திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த இவர் மீது கொள்ளை, வழிப்பறி என 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைது செய்யும் போது அவர் தப்ப முயற்சிக்கவே, கையில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தகவல்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை ஆட்சியர் திருமதி. கற்பகம் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாமல்லபுரம் கடற்பகுதியில் மாயமான ஆந்திர மாணவர்கள் 4 பேரின் உடல்களை இரண்டாம் நாளாக தீயணைப்புப் படையினர் இன்று தேடி வருகின்றனர்.
ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்த 46 பேர் சுற்றுலா வந்த நிலையில், கடற்கரை கோயில் அருகே நேற்று கடலில் குளிக்கும் போது 10 பேர் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அப்பகுதி மீனவர்கள் 6 பேரை மீட்ட நிலையில், 4 பேர் கடலில் மாயமாகினர். இன்று ஒருவர் உடல் மீட்கப்பட்டது. மற்ற 3 பேரை ஸ்கூபா டைவிங் குழுவினர் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 1901ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இன்று திறக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் திறந்து வைத்தார். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்பு

சென்னை
பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் `தீ’ விபத்து.
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஃபுட் ஸ்ட்ரீட்டில் தீ விபத்து.. 3 பணியாளர்கள் காயம்.
காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதி – போலீசார் விசாரணை


About The Author