நகைக் கடன் தள்ளுபடிக்கான பணத்தை தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். “கூட்டுறவு நிறுவனங்களில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பொத்தாம் பொதுவாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக, கடன் தள்ளுபடி கேட்டு விண்ணப்பித்த கிட்டத்தட்ட 49 லட்சம் நபர்களில், வெறும் 13 லட்சம் நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி அறிவித்துவிட்டு மீதமுள்ள 36 லட்சம் நபர்கள் கடன் பெற தகுதியற்றோர் எனத் தெரிவித்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.