உக்ரைனில் இருந்து எல்லைப் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் இந்திய மாணவர்கள் ரயில் நிலையங்களில் தவித்து வருகின்றனர்.உக்ரைன் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இனப்பாகுபாடுடன் நடந்து கொள்வதாக இந்திய மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கார்கிவ் நகரில் இருந்து உடனே ஏதாவது ஒரு நகருக்கு சென்றுவிடுமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மாலையில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உயிர் பயத்துடன் பலநூறு இந்திய மாணவர்கள் பலர் ரயில் நிலையங்களுக்கு சென்றனர்.

ஆனால் சில ரயில் நிலையத்தின் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுவதாக இந்திய மாணவர்கள் குற்றம் சாட்டினர். இனபாகுபாட்டுடன் உக்ரைன் போலீசார் மற்றும் ராணுவத்தினர் நடந்து கொள்வதாக கூறும் இந்திய மாணவர்கள், தங்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டுவதாகவும் பல இந்திய மாணவர்களை அவர்கள் கடுமையாக தாக்கியதாகவும் வேதனைப்பட தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே இந்திய மாணவர்கள் கூறியுள்ள இனப்பாகுபாடு குற்றச் சாட்டை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. யாரையும் தங்கள் நாட்டு ராணுவம் மற்றும் போலீசார் இனபாகுபாட்டுடன் நடத்தவில்லை என அந்த நாடு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மகாலட்சுமி.

About The Author