சென்னை: தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
வேளாண் பட்ஜெட் தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள், பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதுடன், அவர்களின் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்படுவதால், மழையில் நனைந்து முளைத்து விடுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author