தேசிய அளவிலான அதெலடிக் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய சேலம் மாவட்டத்தை சார்ந்த வீரர்களை அவமரியாதை செய்த கேரள அதிகாரி .ரயில் புறப்பட்டு கொல்லம் ரயில் நிலையம் வந்தபோது டிக்கெட் பரிசோதகர் உபகரணங்களை ஜன்னலில் கட்டிவந்த காரணத்தை காட்டி, கொல்லம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டு தங்கள் ஆதங்கத்தை வீரர்கள் சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக தங்களது விளையாட்டு உபகரணங்களை இப்படியே எடுத்து செல்வதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.