தமிழகத்தில் கொரானா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் திரு / மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளிவிட்ட அறிவிப்பில்!

சென்னை தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்த முதல்வர் திரு / மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த முறை அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களின் நலத்தினை கருத்தில் கொண்டு மேலும் சில தளர்வுகள் அறிவித்தார்.

மளிகை கடை, சாலையோர காய்கறி பழக்கடைகள்,காய்கறி கடைகள்,வாகன பழுது நீக்கும் கடைகள், இறைச்சி கடைகள், சாலையில் காய்கறி பழம் பூ விற்பனை கடைகள்,காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் இயங்கலாம் என்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள், 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மின் பொருட்கள் கடைகள் ,ஹார்டுவேர் கடைகள்,செயல்பட அனுமதி அளித்து முதல்வர்
திரு/ மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் வீட்டுவேலை செய்பவர்கள் எலக்ட்ரீசியன், பிளம்பர் கள்,கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்,தச்சர்கள் உள்ளிட்ட சுயதொழில் வேலை செய்வதற்கு முதல்வர் திரு / மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

S. முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்

About The Author