டெல்லி கோகுல்புரியில் குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அப்போது அவர்களால் ஏழு உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியின் கூடுதல் DCP கூறுகையில்: கோகுல்புரி PS பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக குழுக்கள் அனைத்து மீட்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன. நாங்கள் தீயணைப்பு துறையையும் தொடர்பு கொண்டோம்.அதிகாலை 4 மணிக்குள் எங்களால் தீயை அணைக்க முடிந்தது.எனினும்,30 குடிசைகள் எரிந்தன மற்றும் 7 பேர் பலியாகியுள்ளனர்”,என்று தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

About The Author