செங்கல்பட்டு மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ( 02/07/21 ) பத்திரிக்கை செய்தி வெளியீட்டில்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் காவலர்களை பற்றியும் அவர்களின் சிறப்பான பணியினை பற்றியும் பாராட்டும் விதமாக cop of the week’ என்று ஒவ்வொரு வாரமும் ஒரு காவலரை தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பாராட்டு சான்றிதழ், பண வெகுமதி, மற்றும் ஒரு புத்தகம் ஆகியவை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் பணிபுரியும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் ஊர்க்காவல் படையினர்களில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களை பற்றி ( 72001-02104 ) என்ற எண்ணிற்கு SMS,
WHATSAPP, அல்லது அலைபேசி PHONE CALL மூலம் தொடர்பு கொண்டு ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்குள் காவலர்களின் சிறப்பான பணி குறித்து தெரிவிக்கலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் பற்றி
( 24X7 ) ( 72001-02104 )
என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு எந்த நேரமும் தகவலை தெரிவித்த உடனே விசாரணை செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
காவல் கண்காணிப்பாளர்

செய்தி: s.முஹம்மது ரவூப்

About The Author