அதிமுக-அமமுக ஒன்றிணைந்து சசிகலா தலைமையில் டிடிவி தினகரன் வழி நடத்தலில் இயங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார். அதிமுக-அமுமுக பிரிந்து இருந்ததால் தான் திமுக வெற்றி பெற்று விட்டது. உள்ளாட்சி தேர்தலைஅதிமுக ஆட்சியில் இருந்த போதே நடத்தி இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் வென்றிருக்கும். முன்னதாகவே தேர்தலை நடத்தி இருந்தால் வென்றிருக்கலாம் என பல அதிமுக கவுன்சிலர்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர். எனவே இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.