கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள ஆக்சிஸ் ஹோட்டலில் இன்று காலை 10மணியளவில் கோடக் மகேந்திரா லைஃப் இன்சுரன்ஸ் சார்பாக.. இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு
பெண்களை சுயதொழில் ஊக்குவிக்கும் விதமாக
நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் கோடக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் மேலாளர் கார்த்திக் தலைமையில் நடந்த இந்த விழாவில் அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். இதில் கலந்து கொண்ட பெண்கள் பலரும் ஆர்வத்துடன் பயிற்சி தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துக் கொண்டனர்.

இவ்விழாவில் திருமதி ஜெயவாணி அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இந்த விழாவில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் திருமதி பிரதீபா வரவேற்றார்.

செய்தி ராஜேந்திரன் கோவை

About The Author