கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 93 ஆயிரத்தை தாண்டி பதிவானது. மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா , தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேவைக்கேற்ப மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகளே விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி உயர் மட்ட  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் கேபினட் செயலர், முதன்மை செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் எனத்தெரிகிறது. 

செய்தியாளர் ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author