கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை சேலம் அரசு மருத்துவமனையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று செலுத்திக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- “ தமிழகத்தில் 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதுமான அளவுக்கு படுக்கை வசதிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

செய்தியாளர் ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author