கொடைக்கானல் எம்எம் தெருவை சேர்ந்த டேவிட் கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு டீ விற்று வருபவர் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகன் காட்சன் வயது 29 இரண்டாவது மகன் சாலமோன் என்ற பிளாஷ் சன் வயது 26 சம்பவத்தன்று கொடை இன்டர்நேஷனல் பள்ளியில் 7 ரோடு கொடைக்கானல் (சோசியல் சர்வீஸ் ப்ராஜக்ட்) சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார் நேற்று முன்தினம் சுமார் 12 மணிக்கு கோடை இன்டர்நேஷனல் பள்ளிக்கு சொந்தமான கங்கா காம்பவுண்ட் என்ற இடத்தில் வேலைக்கு சென்ற போது மர்மமான முறையில் இறந்துவிட்டார் இதில் அவர் உடன் வேலை பார்த்த டேவிட் ஜான் பால் குறிஞ்சி நகர் என்பவர் உடன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார் அதில் உங்கள் மகன் தகரத்தின் மேல் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும் அவர் மயக்க நிலையில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார் உடன் சென்று தந்தை டேவிட் மற்றும் மூத்த மகன் காட்சன் பார்த்த பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மருத்துவமனை வட்டாரம் கூறியது இதனைத்தொடர்ந்து தந்தை டேவிட் கொடைக்கானல் காவல் நிலையத்தில் சென்று புகார் மனு அளித்தார் இதனைத்தொடர்ந்து சார்பு ஆய்வாளர் எம் கிருஷ்ணகுமார் கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்.. செய்தி ரமேஷ் தேவா கேமராமேன் செய்தி செல்வம்