மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு  அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எல்லோரும் மகளிர் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துவரும் நிலையில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது  டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், 
கடவுளாக்கிஒதுக்குவதுமில்லைஅடிமையாக்கிஅடக்குவதுமில்லை
சில நேரங்களில்ஆணினும் மேலானவள்மற்றபடி நிகரானவள்
உன் தியாகத்தை -திண்மையை -கற்றுக்கொள்ளாமலேகழிகிறது ஆண்கூட்டம்
நீ இல்லையேல்ஈர்ப்புமில்லை;காப்புமில்லை
எப்போதும்போல்மகளிர் தினத்திலும்மதிக்கிறேன் பெண்ணே!
 என பதிவிட்டுள்ளார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

About The Author