அதிக ஒலி எழுப்பும் சாதனங்களிடம் இருந்து விலகி இருங்கள். வருங்காலத்தை உடல் நலத்தோடு உற்சாகமாய் எதிர்கொள்ளுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உலக காது கேட்கும் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். புதிய புதிய ஒலிச் சாதனங்களைப் பயன்படுத்தும் நாம் அவற்றைப் பற்றிப் புரிதல் ஏற்படுத்திக்கொள்ள விழிப்புணர்வாக இந்நாள் அமைந்திருக்கிறது. மாணவச் செல்வங்களும் இளைஞர்களும் தங்களுடைய ஆடியோ சாதனங்களில் அதிக ஒலி வைத்து நீண்ட நேரம் கேட்டால், அவர்களுடைய காது நரம்புகள் பாதிக்கப்பட்டு, கேட்கும் திறன் இளம் வயதிலேயே குறைந்திட வாய்ப்புண்டு என்று மருத்துவர்களும் அறிவியலாளர்களும் விடுக்கும் எச்சரிக்கையைச் சற்றே காது கொடுத்துக் கேட்டிட வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

About The Author