ரஷியா கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது போர் புரிந்துவரும் நிலையில், உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், போரினால் பல்வேறு பின்விளைவுகளை உக்ரைனும், பிற நாடுகளும் சந்திக்க உள்ளன.
அதன் ஒருபகுதியாக உக்ரைன், ரஷியா, பெலாரஸ் மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் சுமார் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ஐ.டி பணியிடங்கள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படவேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. ரஷியா மற்றும் பெலாரஸ் மீது அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக ஐ.டி துறை கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.