வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்வால், ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு வகைகளின் விலையை, 20 சதவீதம் வரை உயர்த்த, ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை, சமீபத்தில் 268 ரூபாய் உயர்ந்து, 2,406 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், ஹோட்டல்கள் நடத்துவோருக்கு செலவு அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.