செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள
சுகாதார நிலையங்களில் வேலை வாய்ப்பு
கலெக்டர் அறிவிப்பு
சென்னை, டிச.11: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் 71 துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு சுகாதார மையங்களில் (HWC – HSCS) பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண் மட்டும்) ஆய்வாளர் (Multi – Purpose Health Worker (Male) – Health Inspector Grade II மற்றும் 126 துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் (HWC HSCs) இடைநிலை சுகாதார பணியாளர் (Mid level Health Provider) பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15..12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
இடைநிலை சுகாதார பணியாளர் (Mid level Health Provider) பதவிக்கு விண்ணப்பிக்க செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc) Nursing) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பதவிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 50 ஆகும். பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்) – சுகாதார ஆய்வாளர் (Multi – Purpose Health Worker (Male)) – Health Inspector Grade – II பதவிக்கு 12ம் வகுப்பு (உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10ம் வகுப்பில் தமிழை மொழி பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் / காந்தி கிராம் கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத் துறையால் வழங்கப்பட்ட 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் துப்புரவு பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வேண்டும்.
இப்பதவிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 50 அகும். விண்ணப்ப படிவங்கள் தேசிய நலவாழ்வு குழும் (https: //nhm,tn.gov.in/) வலைதளத்தில் வேலை வாய்ப்பு (career section) பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு (துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்) 15.12.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், தகவல்களுக்கு துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தை அணுகவும். முகவரி: GST Road, JCK Nagar, Chengalpattu – 603002., தொலைபேசி எண்.044 2954 0261 தொர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ச.ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் வேல்முருகன்