AASAI MEDIA
-
டெல்லி கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி உருவச்சிலை
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவராக இருந்தார். இதனை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமான பெரோஷா கோட்லா மைதானத்துக்கு அருண்ஜெட்லி பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், அருண் ஜெட்லியின் 68-வது பிறந்த நாளையொட்டி அந்த மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்து வைத்தார்.
-
எம்ஜிஆரின் நெகிழ்ச்சி!
“அன்னை தெரசா அவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த போதும், எழுந்து நடந்த போதும், அவர் நடமாடும் போதும் என் அன்னையைப் போல் இருந்தார்.என் தாய் உயிருடன் இருந்திருந்தால் இவரைப் போலத்தான் இருந்திருப்பார். அன்றைய தமிழக முதல்வர் எம்ஜியார் 02.03.1984 அன்னை தெரசா பல்கலைக் கழக திறப்பு விழாவில் பேசியது. நன்றி சுதர்சன்
-
சீனாவின் பெய்ஜிங் நகரில் கட்டுப்பாடுகள் தீவிரம்!
சீனாவில் உள்ள உகான் நகரில் தான் முதன் முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இந்த நோய்க்கான மருந்தை விஞ்ஞானிகள் ஒருவழியாக உருவாக்கி இருக்கும் சூழ்நிலையில் தற்போது கொரோனா உருமாற்றம் அடைந்து மக்களை பீதியடைய வைத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. பொதுவாக எந்த ஒரு…
-
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிக்ளகொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி வரும் 7-ந் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிட்னி நகரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிட்னி நகரம் அமைந்துள்ள மாநிலத்தை ஒட்டியுள்ள மற்ற மாநிலங்கள் சிட்னியில் இருந்து வரும் நபர்கள் 14 நாடகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளன. இதனால் 3-வது போட்டி சிட்னியில் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில்…
-
ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ
ஹூவாய் நிறுவனம் சீனாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அது ஹூவாய் நோவா 8 மற்றும் ஹூவாய் நோவா 8 ப்ரோ ஆகும். ஹூவாய் நோவா 8 மற்றும் நோவா 8 ப்ரோ மாடல்கள் கருப்பு, பர்பிள் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் வருகிறது. சீனாவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. ஹூவாய் நோவா 8 அம்சங்கள்ஹூவாய்…
-
கொய்யா பழத்தின் மருத்துவ பயன்!
கொய்யாப்பழம் நார்ச்சத்துக்கு ஆதாரமாக விளங்கும் பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நார்ச்சத்தின் அளவில் 12 சதவீதத்தை ஒரு கொய்யாப்பழம் பூர்த்தி செய்கிறது.கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்புரை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.கொய்யாப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது.கொய்யாப் பழம்…
-
2021-ஆம் ஆண்டு 4 கிரகணங்கள்!
புதுடில்லி: 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழ இருப்பதாக மத்தியப் பிரதேச வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜையினியில் உள்ள வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது: 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில், ஒரு பூரண சூரிய கிரகணமும், ஒரு பூரண சந்திர கிரகணமும் வரும். மே 26ம் தேதி பூரண சந்திர கிரகணம் நிகழும். இது மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை மற்றும் சில வடகிழக்கு…
-
விமானங்களுக்கு தற்காலிகமாக தடை
பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அது காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட…
-
டெல்லியில் போராட்டம்
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அமைப்பினர் புதன்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளன. அந்த கடிதத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்தும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது குறித்து மட்டுமே பேச்சுக்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.
-
கெற்பவோட்ட நாட்கள் என்றால் என்ன?
குறிப்பிட்ட சில நாள்களில் மேகங்கள் கடலுக்குள் சென்று நீரை குடித்து விட்டு விண்ணில் செல்லும் நாள்களே கெற்பவோட்ட நாள்கள். மார்கழி மாதம்14 ம் தேதி தொடங்கி இது நடக்கும். ஒரு வருடத்தில்13-1/4 நாள்கள் இது நடக்கும். இந்த நாள்களில் மேகங்கள் சாரை சாரை ஆக சென்று கொண்டு இருக்கும். இன்று மார்கழி 14ம் தேதிதொடங்கி மார்கழி 27ம் தேதி வரை (13-1/4 நாட்கள்)இது நடைபெறும். Astro Selvaraj TrichyCell: 9842457912 தகவல் வே. இராஜவர்மன் டில்லி










