AASAI MEDIA

  • பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்.

    பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்.

    இளைய திலகம் பிரபுவின் 64 ஆம் ஆண்டு பிறந்த தினம்( 31.12.2020) இன்று இளையதிலகம் பிரபுவின் 64 வது பிறந்த தினம் .நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரை வாரிசு பிரபு.1982 இல் இயக்குனர் சி.வி.ராஜேந்திரனின் இயக்கத்தில் வெளியான “சங்கிலி”திரைப்படத்தில் தனது தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து “ராஜாளி”என்ற பாத்திரத்தில் நடித்து தமிழ்த்திரையில் அறிமுகமானார்.தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஆங்கிலம் உட்பட சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் பிரபு.இவரின் சிறந்த நடிப்பில் வெளியான “சின்னத்தம்பி”அமோக வெற்றி கண்ட படம்.இப்படத்தில்…

    read more

  • நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை

    நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை

    தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும்; நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தி செந்தில்நாதன் இணையாசிரியர்

    read more

  • பசுமை வீடு.

    பசுமை வீடு.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 23 பயனாளிகளுக்கு தமிழக முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் 1.35 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். செய்தி, செந்தில்நாதன் இணையாசிரியர்

    read more

  • பொங்கல் பரிசு ரூ.2,500/-

    பொங்கல் பரிசு ரூ.2,500/-

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500/- வழங்க டோக்கன் விநியோகிப்பு : தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2500/- மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் என்றும் எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் முதலமைச்சர் கூறி…

    read more

  • திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

    திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021

    உலகத் திருக்குறள் மையம், சென்னை காணொலிவழித் திருக்குறள் மார்கழித் திருவிழா – 2021 ?????????? 16-12-2020 முதல் 14-01-2021 முடிய மாலை 6-30 முதல் 7-00 மணி இணைப்பு:- திருக்குறள் மார்கழி விழா மாமணி விருது -2021 திருக்குறள் மார்கழி விழா ஆய்வரங்கமானது தொடர்ந்து 30 நாள்கள் (ஒவ்வொருநாளும் அரை மணி நேரம்) நடைபெறும். இதில் தொடர்ந்து பங்கேற்பவர்களுக்குத்‘திருக்குறள் மார்கழி விழா மாமணி – 2021’ என்னும் மிக உயரிய விருது வழங்கப்படும். திருக்குறள் முற்றோதல்( 71-75…

    read more

  • கலைஞர்கள் வாழ்வில் ஏணி

    கலைஞர்கள் வாழ்வில் ஏணி

    கலைஞர்கள் வாழ்வில் ஏணியாய் நின்று ஏற்றம் கண்டு போற்றிய மா மனிதர்“மாருதி குமார்” அவர்கள்.திரையில் கண்ட நட்சத்திரங்களையும்,செவியில் கேட்ட கீதங்கள் இசைத்த பாவலர்களையும் நேரில் காணவைத்த கலாரசிகன் திரு. குமார் அவர்கள்.தனது பாரம்பரிய ஊரான கொட்டகலை நகர் ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பை நல்கி திருப்பணி ஆற்றிய சிறப்புக்குரியவர்.தென்னகத் திரைவானில் நான் பல கலைஞர்களை சந்தித்து மகிழ்ந்த தருணங்களில்,அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர்களுள் திரு. குமார் முன்னிலையானவர்.தன் வாழ்நாளில்பெரும் பங்கை கலைக்ககாகவே சேவை செய்த…

    read more

  • மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி

    மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி

    தமிழ் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது மார்கழி. இந்த மாதத்தில், காலைப் பனிக் குளிர் உண்டு. என்றாலும், பக்தியால் அதை விரட்டி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி பரவசப்படும் பக்தர்களும் கோவில்களில் உண்டு. மார்கழி மாதத்தில், திருவாதிரையில் தாண்டவமூர்த்தியான நடராஜரை வழிபட்டால், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும் கிடைக்கும் என, காரண ஆகமம் கூறுகிறது.ஆனந்தம் ஆடாங்கு, ஆனந்தம் அகில சராசரம், ஆனந்தம், ஆனந்தக் கூத்து என, திருமூலர் ஆனந்த தாண்டவத்தைப் போற்றுகிறார்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவாதிரை ஆருத்ரா…

    read more

  • புதிய வகை கரோனா தாக்கம்

    புதிய வகை கரோனா தாக்கம்

    “டிசம்பர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதிவரை புதிய வகை கரோனா தாக்கம் உள்ள 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு பயணத் தடை விதிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட…

    read more

  • புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

    புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

    பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் 2016-ம்ஆண்டு ஜன.2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை பாதுகாப்பில் இருக்கும் ராணுவம், விமானப்படை தளங்கள், கப்பல் படை தளங்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸார் என பாதுகாப்புபணியில் இருக்கும் ராணுவத்தினர் மற்றும் அனைத்து பிரிவு போலீஸார் மீது தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

    read more

  • கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி

    கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி

    இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு–அஸ்ட்ராஜெனேகா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கி வந்தது. கொரோனா தொற்றுக்கு எதிராக 5 கோடி தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது என்றும், மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்துள்ளது.

    read more