உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,208-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,526-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்தது. இன்று தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சியைக் காண முடிகிறது. தங்கத்தில் தொடர்ந்து பலவித ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. 

About The Author