Month: January 2021
-
2 வாரங்களுக்கு நீட்டிப்பு..
தென்கொரியாவில் பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு
-
4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சென்னை மற்றும் புறநகரில் சில…
-
காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி!
306 கி.மீ தூர உடைய புதிய ரெவாரி-புதிய மதார் பிரிவை 2021 இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்ச்சியின் போது, புதிய அட்டலி-புதிய கிஷன்கர்க் வரையிலான மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5 கி.மீ நீள பெட்டக ரயிலையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான், அரியானா மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கலந்து…
-
செவியலியர் உயிரிழப்பு..
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 மணி நேரத்தில் செவியலியர் உயிரிழப்பு.. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதன் முதலாக ஒப்புதல் கிடைத்த பைசர் தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது. போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது போர்ச்சுக்கல் நாட்டில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட…
-
தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகம் முழுவதிலும் உள்ள கட்டிடங்களுக்கு 300 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகம் முழுவதிலும் இரண்டு அடுக்கு மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்கள் மற்றும் 300 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு 375 சதுர அடி வரையிலும், தொழிற்சாலைகளில் 222 சதுர அடி வரையும், வணிக…
-
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலை கடையில் வழங்கப்பட்டது! தமிழக அரசு தமிழக முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்த அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தொகை ரூ, 2500 மற்றும் அரிசி சர்க்கரை முழுக் கரும்பு V.M. தெருவில் உள்ள பாலாஜி நகர் கடை எண்:NA:033 வழங்கப்பட்டது.பொதுமக்கள் சமூகஇடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர். S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.
-
புதினாக்கீரை
புதினாவில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, டி, ஈ மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வாய்வழி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. பாக்டீரியாவைக் கொல்லும் சக்தியைக் கொண்டுள்ளது. இது உங்கள் பற்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். உங்கள் நாக்கையும் பற்களையும் சுத்தமாக வைத்திருக்கும். வாய் துர்நாற்றத்துடன் எந்த பிரச்சனையும் இல்லை. சளி மற்றும் இருமலுக்கு ஒரு நல்ல தீர்வாகும். புதினா பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது,
-
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு
கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டம் குட்டநாடு பஞ்சாயத்துக்குட்பட்ட எடத்துவா, பள்ளிப்பாடு, தாளவாடி, தழக்காகர ஆகிய பகுதிகளில் ஏராளமான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன.ஒவ்வொரு பண்ணையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வளர்க்கப்பட்டன. சமீபத்தில் இந்த பறவைகள் நோய் வாய்ப்பட்டு இறந்தது. இதுபற்றி அறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இறந்த பறவைகளின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த ஆய்வில் பறவை…
-
புதிய வகை கொரோனா வைரஸ்
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.அதேசமயம் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று எச்சரித்தார்.
-
கங்குலியிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
முன்னாள் கேப்டன் கங்குலி 48. கொல்கத்தா பெகலா வீட்டில் உள்ள டிரட்மில்லில் பயிற்சியில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் , லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக உட்லாண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவரது இருதயத்துக்கு செல்லும் ரத்தகுழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதில் ஒன்று 90 சதவீதம் இருந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு அடைப்பு நீக்கப்பட்டது. தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கும் கங்குலி நலமாக உள்ளார். இவர்…










