Month: January 2021
-
அமெரிக்காவில் சிக்கிய ராணுவ வீரர்? கசிந்த ராணுவ ரகசியம்?
அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபராக பைடன் நேற்று பதவியேற்றார். இதனிடையே, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை வெடித்தது. இதனையடுத்து, வன்முறைகளை தடுக்கும் வகையில், அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2019-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயதான ராணுவ வீரர் கோல் ஜேம்ஸ் பிரிட்ஜஸ் என்பவர் ஆரம்பம் முதலே தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் ஆன்லைன்…
-
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்பப் பெற வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை மேலும் தாமதமின்றிக்…
-
விக்டோரியா மருத்துவமனை அறிக்கை! சசிகலாவின் நுரையீரலில் தொற்று?
ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, கொரோனா பரிசோதனையில், அவருக்கு…
-
அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு?
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு, நவம்பர்/ டிசம்பர் 2020 செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, அவற்றுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் நவம்பர்/ டிசம்பர் 2020 செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன. இதற்கிடையே சில செமஸ்டர் தேர்வுகளை ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. அதற்கான மாற்றுத் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”அண்ணா பல்கலைக்கழககம் மற்றும் அதன்…
-
ஜோபைடனுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் கடிதம்?
முன்னாள் அதிபர் ட்ரம்ப் பைடனுக்கு கனிவான கடிதம் ஒன்றை வெள்ளை மாளிகையில் விட்டு சென்றுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். முன்னாள் அதிபர்ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இந்நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். ஆனால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு பைடனை வரவேற்கவில்லை. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக 150 வருடங்களாக…
-
எடப்பாடி பழனிசாமியுடன் மீன்வளத்துறை மந்திரி திடீர் சந்திப்பு
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. செய்தியாளர் ரஹ்மான்
-
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சென்னை: கொரோனா தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். செய்தியாளர் ரஹ்மான்
-
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று பவ்ரிங்கில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது. சிடி ஸ்கேன் உள்பட சில வசதிகள் இல்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை 6.30 மணி அளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘சசிகலா உடல்நிலை சீராக உள்ளது.…
-
விவசாயிகளுக்கு 15நாட்களில் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை.
15 நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று yவேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார் சென்னை, நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 15 நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பருவம் தவறிய மழையால் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த…
-
29-ந்தேதி நாடாளுமன்றம் கூடுகிறது
கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்கும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆய்வு செய்தார். புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என்று 3 தொடர்கள் நடைபெறும். கடந்த ஆண்டு நாட்டில் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 1-ந்தேதிக்கு பதிலாக செப்டம்பர் 23-ந்தேதி முன்கூட்டியே முடிக்கப்பட்டது. அடுத்து நவம்பர் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெறுகிற குளிர்கால…










