Month: January 2021
-
பள்ளி பேருந்துகள் மஞ்சள் நிறம் ஏன் தெரியுமா?
ஒவ்வொரு பள்ளி பேருந்திலும் அதன் பள்ளி பெயர் எழுதப்பட்டிருப்பதையும், மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் கவனித்திருக்க வேண்டும். பொதுவாகவே ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. போக்குவரத்து விளக்குகள் கூட வெவ்வேறு வண்ண விளக்குகள் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளன. இதன் உதவியுடன் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படுகிறது. அதே போல பள்ளி பேருந்துகளுக்கும் ஒரு வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.. அது மஞ்சள். ஆனால் கேள்வி என்னவென்றால், பெரும்பாலான பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டுள்ளன? இதற்குப் பின்னால் ஏதாவது அறிவியல்…
-
தமிழக அரசு எச்சரிக்கை?சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்?
சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முழுமையாக குறையவில்லை. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் பணிபுரிகின்றனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை போன்ற பல புகார்கள் வந்துள்ளது. எனவே தமிழக அரசு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தான் பணிக்கு வரவேண்டுமென தமிழக…
-
தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழு ஆய்வு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் ‘நிவர்’புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து துறை அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழு இணை ஆலோசகர் நவல் பிரகாஷ், சார்புச் செயலர் பங்கஜ்குமார், மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரிஆகியோர் தலைமையில் பருவமழை காலங்களில்…
-
மீனவர்கள் அடையாள அட்டை எடுத்து செல்ல அறிவுறுத்தல்?
மீனவர்கள் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, ஃபைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், மீனவர்கள் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்போது அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மீன்வளத் துறை உதவி இயக்குநர் வேலன் மீனவ சங்க தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய கடற்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை…
-
பம்மல் S-6 சங்கர் நகர் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் S-6 சங்கர் நகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் பறக்கத்துள்ளாஹ் அவர்கள் ஆலோசனைப்படிபம்மல் பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வது தனிநபர் இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று காவல் துணை ஆய்வாளர்கள் கருப்புசாமி, செல்வமணி அவர்கள் தலைமையில் காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்
-
340 கோடி லாட்டரியில் பரிசு வென்ற பெண்!
கனடாவில் கணவர் கனவில் வந்து கூறிய எண்களை வைத்து லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண் ஒருவருக்கு ரூபாய் 340 கோடி பரிசு கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதுதமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கனடாவில் சமீபத்தில் ரூபாய் 340 கோடி பரிசு லாட்டரி ஒன்றின் குலுக்கல் நடந்ததுஇதில் அந்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 340 கோடி பரிசை வென்றார். இவர்…
-
பாகிஸ்தான் PIA விமானம் 177 பயணிகளுடன் கோலாலம்பூரில் பறிமுதல்?
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (Pakistan International Airlines (PIA)) விமானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது, இந்த முறை நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் விமான நிறுவனம் சிக்கலை எதிர்கொள்கிறது. பொருளாதார பிரச்சனையால், கோலாலம்பூர் விமான நிலையத்தில் PIA-வின் விமானம் பறிமுதல் செய்யப்பட்டது, அப்போது விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். விமான குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தாத பிஐஏ (PIA) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் (Court) தீர்ப்பளித்தது. அதையடுத்து மலேசிய அதிகாரிகள் கோலாலம்பூர் விமான…
-
கர்நாடக மாநிலத்தில் அவசர ஆம்புலன்ஸ் விமான சேவை தொடக்கம்!
நாட்டிலேயே கர்நாடகா மாநிலத்தில் முதல் முறையாக அவசர தேவைக்காக ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டு, விமான ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நோயாளிகளுக்கு மிகவும் நெருக்கடியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்கி உயிரை காப்பாற்றுவது மிக முக்கியமான பணி. அந்த வகையில், இந்த ஒருங்கிணைந்த விமான ஆம்புலன்ஸ் சேவை…
-
ரபேல் விமானம் சாகசம்! மேஜர் ஜெனரல் அலோக் கேகர் தகவல்?
தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் நிகழ்த்தப்பட இருக்கின்ற விமான சாகசங்களில் ரபேல் விமானம் முதல் முறையாக மக்களின் பார்வைக்கு அணிவகுக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது மேஜர் ஜெனரல் அலோக் கேகர் கூறியதாவது: “முதல்முறையாக ரபேல் விமானங்கள் குடியரசு தின சிறப்பு அணிவகுப்பில் மக்களின் பார்வைக்கு காண்பிக்கப்பட உள்ளது. விமான சாகசங்களின் போது ரபேல் விமானத்தின் சாகசங்களும் இடம்பெறுகின்றது என்றார். அத்துடன் விமான சாகச த்தின் போது…
-
எல்லையில் சீனப் படைகள் அத்துமீறினால் பதிலடி கொடுப்போம்?
புதுடெல்லி: விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவுக்கு 8 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஜனவரி இறுதிக்குள் மேலும் 3 விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமான படையில் ரபேல் விமானங்களை சேர்க்கும் பணி வரும் 2023-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றார். கிழக்கு லடாக்கில் சீனப்படைகள் அத்துமீறக் கூடிய வாய்ப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் நாமும் பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.…










