AASAI MEDIA
-
போலீசார் கட்டாயம் மருத்துவ பரிசோதனை
சமீபத்தில் டில்லியில் 231 பேர் பல்வேறு பிரச்னைகள் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அனைவருக்கு மருத்துவ பரிசோதனை மிக அவசியமாகிறது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட போலீசார் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்தே ஆக வேண்டும் எனவும் இது முன்கூட்டியே நோய் தொடர்பான தகவல்களை பெற்று சீர் செய்து கொள்ள முடியும். இது மேலும் உயிர்ப்பலியை குறைக்க உதவும். ஏற்கனவே போலீஸ் குடியிருப்புகளில் ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீசார் மற்றும்…
-
5ம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி
கேரளா: வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் ,வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:மாநிலத்தில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவீத அளவிற்கு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரங்குகளில் நடத்தப்படும் கூட்டங்களில் 100 பேர் வரையிலும் வெளியே நிகழ்ச்சி நடத்தினால் 200 பேர்…
-
இந்தியாவிலும் மர்ம உலோகத் தூண்
உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் ஒரு இடத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூணை பார்த்ததாக தெரிவித்தனர். அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென தோன்றிய ஒற்றைத்தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6 அடி உயரம் கொண்டது. இதுபோன்ற தூண் இந்தியாவில் தென்பட்டது இதுதான் முதல் தடவையாகும். அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள…
-
கர்ணன் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கர்ணன். ஆக்ஷன் திரைப்படமான இந்தப் படத்தில் சண்டைக்கோழி புகழ் லால், அறிமுக நாயகி ரஜீஷா விஜயன், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ். தானு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இன்று ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கர்ணன் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தேனி ஈஸ்வர், ஆர்.கே.செல்வா, தா.ராமலிங்கம், யுகபாரதி, திலிப் சுப்பராயன்,…
-
பணி ஓய்வு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி அவர்களை முகாம் அலுவலகத்தில்தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் திரு/எம்.எஸ். ஜாபர் சேட், இ.கா.ப. பணி ஓய்வு பெறுவதை யொட்டி முதல்வரை சந்தித்துபூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். K..N. அப்துல் சமதுதலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.
-
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாட்டத்தில் அஜாடி கிராமம் படர் நல்ஹா என்ற பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று காலை வழக்கம்போல இந்திய எல்லைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஒரு சிறுவன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, எச்சரிக்கையுடன் செயல்பட்ட எல்லைப்பாதுகாப்பு படையினர் எந்தவித தாக்குதலும் நடத்தாமல் அந்த சிறுவனை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்…
-
தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்!
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை தலைமைச் செயலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி/ ஆர்.லலிதா, இஆ ப, முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். செய்தி S. செந்தில்நாதன் இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்
-
விவசாயிகளுடன் 6-வது கட்ட பேச்சுவார்த்தை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 35-வது நாளாக நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஏற்கனவே நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர். அதேநேரத்தில் விவசாயிகள் 4 நிபந்தனைகளை விதித்தனர். 3 சட்டங்களையும் வாபஸ் வாங்கியே தீர வேண்டும். விளை பொருட் கள்…
-
கொரோனா தடுப்பூசி ஒத்திகை திருப்தி
கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒத்திகையில் பங்கேற்க இருப்போரின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு செல்போன் மூலம் தடுப்பூசி செலுத்தும் நேரம், இடம் தொடர்பான விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டன. அந்தந்த மையங்களுக்கு அவர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் ஒத்திகைகள் நடைபெற்றன. அந்த மையங்களிலேயே குறிப்பிட்ட 30 நிமிட நேரத்துக்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களது தகவல்கள் ‘கோ-வின்’ என்ற மத்திய அரசின் புதிய வலை தளத்தில் சேமித்து வைக்கப்பட்டன. அவர்களை தொடர்ந்து…
-
துணை முதல்வருக்கு முதலமைச்சர் புத்தாண்டு வாழ்த்து!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். S. செந்தில்நாதன் இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்










