தமிழக அரசு ஏற்பாடு : நடமாடும் காய்கறி வண்டிகள்

தமிழ்நாடு 23-05-2021:
தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த ஏழு நாட்களுக்கு காய்கறி கடைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு நடமாடும் காய்கறி வண்டிகளை நியமித்துள்ளனர். இந்த நடமாடும் காய்கறி வண்டிகள் மக்கள் வசிக்கின்ற வீட்டருகே வந்து விற்பனை செய்யப்படும், என்னும் அறிவிப்பை விடுத்து தமிழக அரசு. ஆனாலும் காய்கறி விலையை குறித்து மக்களிடையே குழப்பம் நீடிக்கின்றன. இந்த குழப்பத்தை சரி செய்வதற்காக தமிழக அரசு ஒரு விலைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பரிந்துரை செய்யப்பட்ட விலைக்கு மேல் யாராவது அதிகமான விலையில் காய்கறி வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.

-செய்தியாளர்
செய்யது அலி