தென்காசி மாவட்டத்தில் புதிதாக 439 பேருக்கு கொரோனா

தென்காசி, இன்று (22/05/21)
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 439 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14 ஆயிரத்து 728 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 469 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 78 வயது, 85 வயது பெண்கள் 2 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது.
-செய்தியாளர்
செய்யது அலி.