மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை.

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் நாளை சனிக்கிழமை‌ முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள முழு பொது முடக்கம் வரும் திங்கள்கிழமையுடன் (மே 24) முடிவுக்கு வருகிறது. இந்த முழு பொது முடக்கத்தை நீட்டிப்பதா அல்லது அதில் தளா்வுகளை அளிப்பதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தமிழ் மலர் மின்னிதழ்
செய்தியாளர்.
தமீம் அன்சாரி..