டிஜிபி, ஜே.கே.திரிபாதி, உத்தரவு!
தமிழக காவல்துறை டிஜிபி, ஜே.கே.திரிபாதி,
உத்தரவு!
பத்திரிக்கையாளர்கள் ஊடகத்துறையினர்க்கு இ-பதிவு தேவையில்லை, அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம்,
கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இந்நிலையில் ஊடகத்துறையினர் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபடும் போது
பத்திரிகையாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பயணிக்கலாம். அவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், மாவட்டங்களுக்குள் பயணிக்கவும் இ-பதிவு அவசியம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் வாகனங்களில் செல்ல இ-பதிவு தேவையில்லை என்று அரசு அறிவித்துஇருந்தது.
ஆனால், போலீஸார் சோதனையின்போது பத்திரிகையாளர்களிடமும் இ-பதிவு ஆவணங்களைக் கேட்டு வற்புறுத்தினர். இதுகுறித்து புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் பத்திரிகையாளர்கள், அவர்களுடைய அலுவலக அடையாள அட்டை, தமிழக அரசின் அடையாள அட்டை, பிரஸ் கிளப்அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணம் செய்துகொள்ளலாம். இ-பதிவு தேவையில்லை’ என்று அறிவித்துள்ளார்
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,