மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு !

முதல்வர்
மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு !

கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களான சேலம், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முதல்வர் மு.கஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்தில்கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வரும் 24 ஆம் தேதி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் சில மாவட்டங்களில் மிக அதிக அளவில் காணப்படுகிறது.

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படக்கூடிய சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,