காவல்துறையினர் தீவிர வாகன சோதனை!

காவல்துறையினர் தீவிர வாகன சோதனை!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை பலவித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது, கடந்த 10-ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை விதித்துள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக தமிழக அரசு உத்தரவுப்படி தமிழக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிகளை மீறி வருபவர்களை அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் S-5 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் காவல் ஆய்வாளர் ஆனந்த பாபு உத்தரவுப்படி உதவி காவல் ஆய்வாளர் கபிலன் மேற்பார்வையில் ஜிஎஸ்டி சாலை, ஜமீன் பல்லாவரம், உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு தீவிர கட்டுப்பாட்டிலும் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்,அதேபோன்று நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் முறையான இ-பாஸ் உள்ளதா எனவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து பல்லாவரம் சுற்றுவட்டார பகுதிகளில் தேவையில்லாமல் வெளிவந்த இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் முகக் கவசம் அணியாமல் வருபவருக்கு ரூ,200/-அபராதம் விதித்தனர், தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர் s.முஹம்மது ரவூப்