ஊரடங்கு காலத்திலும் இறைச்சி மற்றும் மீன் கடைகள்
தென்காசி,
இன்று (19-05-21) புதன்கிழமை, தென்காசி மாவட்டத்தில் உள்ள கொடிமரம் என்கிற பகுதியில் ஊரடங்கு காலத்திலும் இறைச்சி மற்றும் மீன் ஆகிய கடைகள் அருகருகே அமைந்திருப்பதால் மக்கள் தேவைக்காக இறைச்சி மற்றும் மீன் வாங்க வரும்பொழுது சமூக இடைவெளி இல்லாமல் பெருந்தொற்றின் அச்சம் இல்லாமலும் இருக்கின்றனர். பொதுமக்களில் சிலர் இறைச்சி மற்றும் மீன் கடைகள் இருப்பதை குறை சொல்லவில்லை என்றும் இருப்பினும் ஒவ்வொரு கடைக்கும் போதிய இடைவெளி இருப்பது அவசியமாகும். மக்களின் அலட்சிய போக்கும் வியாபாரிகளின் பேராசையும் ரெருந்தொற்றை இன்னும் வேகமாக பரவ செய்வது சரியாகாது. மேலும் தமிழக அரசு அதன் சேவையை மிக சிறப்பாக செய்து வருகிறது ஊரடங்கை மக்கள் சரிவர பயன்படுத்த போதிய விழிப்புணர்வும் பாதுகாப்பும் கட்டுப்பாடும் தேவைப்படுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மக்களில் சில நலவிரும்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- செய்தியாளர்
செய்யது அலி