இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..
பள்ளிக்கரணை S-10 காவல் துறை இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்!
தமிழக அரசு கொரோனவைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது, இந்நிலையில் காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர், இதன் ஒரு பகுதியாக பள்ளிக்கரணை S-10 காவல் நிலையத்துக்கு உட்பட்ட காமாட்சி மருத்துவமனை மேம்பாலம் சிக்னல் பகுதிகளில் S-10 பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ், உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் தலைமை காவலர்கள் உதவியுடன் தகுந்த அனுமதி பெறாமல்
இ- பாஸ் இல்லாமல் பயணிக்கும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து
வாகன ஓட்டிகளிடம் பெயர் மற்றும் முகவரி, இருசக்கர வாகனத்தின் சான்று பதிவுகளை பெற்றுக் கொண்டு பறிமுதல் செய்த இரு சக்கர வாகனங்களை S10 காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்
S. முஹம்மது ரவூப்