நிலவில் இரண்டாவது நாடாக கொடி நாட்டிய சீனா!

பிஜீங்,

1969-ம் ஆண்டு, அப்பல்லோ-11 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய அமெரிக்கா, நிலவில் தன் முதல் கொடியை நாட்டியது. அதன் பின் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்தாலும் கொடியை நாட்டவில்லை. இந்நிலையில், 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய திட்டமிட்ட சீனா, இதற்காக கடந்த 24-ம் தேதி சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

இந்த சேஞ்ச் 5 விண்கலம் நேற்று (டிசம்பர் 4) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் விண்கலத்தில் இருந்து வெளியே வந்த ரோவர் இயந்திரம் தனது முதல் நடவடிக்கையாக நிலவின் மேற்பரப்பில், சீன தேசிய கொடி நாட்டப்பட்டது.

இதன் மூலம், நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது.

நிலவில் தங்கள் நாட்டின் கொடி நாட்டப்பட்ட புகைப்படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது

S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.