காவலர் குடும்பத்துக்கு நிதி உதவி
காவல் துறை அதிகாரிகள் சார்பில் மறைந்த ஆயுதப்படை காவலர் குடும்பத்துக்கு நிதி உதவி! மறைந்த நமது கரூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் தெய்வத்திரு மணிகண்டன் குடும்பத்துக்காக இன்று 17.05.2021 ந்தேதி வரை சேகரிக்கப்பட்ட தொகை ரூபாய் 7, 33,000/= (ரூபாய் ஏழு லட்சத்து முப்பத்திமூன்றாயிரம் மட்டும்) பணத்தை நமது கரூர் மாவட்ட கனம் காவல் கண்காணிப்பாளர் அவர்களது பொற்கரங்களால் மணிகண்டனின் துணைவியாருக்கு ரூபாய் 5 லட்சமும் அவரது பெற்றோர்களுக்கு ரூபாய் 2,33,000/= ம் காசோலையாக வழங்கப்பட்டது, இந்த நிதியை வாரி,வழங்கிய கருணை உள்ளம் கொண்ட கரூர் மாவட்ட அனைத்து ADSPக்கள், DSPக்கள், அனைத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து L&O, UNIT, AR காவல் ஆளினர்கள் அனைவருக்கும் மற்றும் மற்ற மாவட்ட அதிகாரிகள் ஆளினர்ளுக்கும்.இதற்காக மிகவும் சிரத்தை எடுத்து அயராது பாடுபட்டு நிதிசேகரிப்பை முன்னின்று எடுத்து செய்த அனைத்து எழுத்தர்கள், ALL BATCH Admins. குறிப்பாக சிவா லோகநாதன் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்பணிவோடு தெரிவித்துக்கொள்கிறோம். S.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்