ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2,000 வழங்கினர்
தமிழக அரசின் உத்தரவின் பேரில் கொரோனா இரண்டாவது அலை நிவாரணமாக அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவில் முதல் கையெழுத்திட்டார்.
இதில் முதல்கட்டமாக ரூ.2,000ஐ இம்மாதமே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கட்கிழமை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து இன்று கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சி பகுதி முழுவதும் ரேஷன் ஊழியர் சூர்யா தலைமையில் டோக்கன் விநியோகிக்கப்பட்டது.
இதில் வரும் 15ஆம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு
ரூ.2,000 கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இவன்
N.அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்