அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை
கொரோனா பாதிப்பால் கோவையை சேர்ந்த பத்திரிகையாளர் மணி மரணம்!
ஆசை மீடியா நெட்வொர்க் இரங்கல் தெரிவிப்பதோடு அரசு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறது!
கோவை மாவட்டம் சூளூர் பகுதி செய்தியாளராக பணியாற்றியவர் மணி. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெரும்தொற்று காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வந்த பத்திரிகையாளர் மணியின் இழப்பு வேதனை அளிக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே பல பத்திரிகையாளர்களை நாம் இழந்துள்ளோம். களப்பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் பணியாற்ற வேண்டும் என்று கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறோம்.
செய்தி நிறுவனங்கள் முடிந்தவரை செய்தியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு களத்திற்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆசை மீடியா நெட்வொர்க் வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டு முதல்வர் அறிவித்தது போலவே முன்களப்பணியாளரான பத்திரிகையாளர் மணியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்றும், களத்தில் பணியாற்றி உயிரிழந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டிய நிதி உதவியை அரசு தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் ஆசை மீடியாடெக் நெட்வொர்க் வலியுறுத்துகிறது.