இரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.

செங்கோட்டை, மே:10
செங்கோட்டை ரெயில் நிலைய வளாகத்தில் ரெயில்வே மருத்துவமனை மற்றும் பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், இரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இரயில்வே மருத்துவமனை டாக்டா் கிருஷ்ணேந்து, பெரியபிள்ளைவலசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டா் கங்கா ஆகியோர் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட இரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

செய்தியாளர்
செய்யது அலி