ஆக்ஸிஜன் கருவி வழங்குதல்..

RSS சேவாபாரதி மற்றும் ப்ரேரணா சார்பாக அரசு & தனியார் மருத்துவமனைகளுக்கான ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் கருவி வழங்கல்

திருப்பூர் மாவட்ட RSS சேவாபாரதி & ப்ரேரணா அறக்கடளை சார்பாக ஆர்.எஸ்.எஸ் காரியாலயத்தில் இன்று அரசு & தனியார் மருத்துவமனைகளுக்கான ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும் கருவியான HFNC வழங்கப்பட்டது (High Flow Nasal Cannual Therapy System).
இந்நிகழ்ச்சிக்கு RSS திருப்பூர் கோட்ட தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் திரு. E.பழனிச்சாமி அவர்கள் தலைமை வகித்தார். RSS மாவட்ட தலைவர் திரு.கார்மேகம் மற்றும் ப்ரேரணா அறக்கட்டளை செயலாளர் திரு.கயிலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ZOHO மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்ட 15 கருவிகள் பெறப்பட்டு திருப்பூர், பல்லடம்,அவிநாசி மற்றும் தாராபுரம் பகுதி அரசு & தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. ஒரு கருவியின் விலை சுமார் ரூபாய் 3.5 இலட்சம். (மொத்தம் சுமார் 52,50,000/- மதிப்புடைய கருவிகள் பெறப்பட்டன).

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது…
“HFNC என்பது ஆக்ஸிஜன் அளவை செறிவூட்டி, அதிகப்படுத்துகிறது. இது 10 லிட்டர் ஆக்ஸிஜன் மேல் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தபடுகிறது. நிமிடத்திற்கு சுமார் 30 லிட்டர் முதல் 50 லிட்டர் வரை ஆக்ஸிஜன் அளவை செறிவூட்ட பயன்படுகிறது. ஏற்கெனவே தனியார் & அரசு மருத்துவமனைகளில் இவ்வசதி இருப்பினும் தற்போது இக்கருவிக்கான தேவை அதிகப்பட்டுள்ளது. அதிகமாக விலை கொடுத்து வாங்க இயலாத சூழ்நிலை இருப்பதால் RSS சேவாபாரதி & ப்ரேரணா சார்பாக இலவசமாக வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட மருத்துவத்துறையின் சார்பாக மனமார்ந்த மகிழ்ச்சியினை சேவாபாரதிக்கு தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.

இந்நிகழ்ச்சியில் RSS, சேவாபாரதி கோட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள், ப்ரேரணா அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தி A.மருதமுத்து