7.05.2021(1964) அன்று… பழம்பெரும் நடிகை கண்ணாம்பா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினமாகும் ..

தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் தன் அபார வசனத்தால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒரே நடிகை கண்ணாம்பா.
வசன உச்சரிப்பில்
சிவாஜி கணேசன் ,
எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு இணையாக பேசப்பட்ட ஒரே நடிகை கண்ணாம்பா.
1911.10.05 அன்று ஆந்திராவில் நந்தியால் மாவட்டத்தில் குர்நூல் என்ற ஊரில் பிறந்தார் பசுபுலவேதி கண்ணாம்பா.
13 வயதிலேயே நாடகங்களில் நடித்து பின் 1934 இல்”சீதா கல்யாணம் “என்ற தெலுங்கு  படம் மூலம் திரையில் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு என சுமார் 170 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த  ஒரு சில முக்கிய படங்கள்: கண்ணகி,ஞானசௌந்தரி,மாதர்குல மாணிக்கம்,சுதர்சன்,மனோகரா,
தாய்க்குப்பின் தாரம்,தாய் மகளுக்கு கட்டிய தாலி,தாயைக்காத்த தனயன்,காத்தவராயன்,
படிக்காத மேதை.படித்தால் மட்டும் போதுமா,
மக்களைப் பெற்ற மகராசி,உத்தமபுத்திரன்.சிவாஜி கணேசனுக்கு இணையாக “மனோகரா”படத்தில் கண்ணாம்பா பேசும் உணர்ச்சி மிகு வசனக்காட்சிகள் இனறளவிலும் ஜனரஞ்சகமானவை. பி.யு.சின்னப்பாவுடன் “கண்ணகி”படத்தில் கற்புக்கரசி கண்ணகியாக இவர் நடித்த நடிப்பு இன்றுவரை யாராலும் செய்ய முடியாத சாதனையாகும்.”படிக்காத மேதை” படத்தில் ரங்காராவ் இறந்த பின் இவரும் சிவாஜியும் கட்டிப்பிடித்து அழும் காட்சியில் திரையரங்குகளில் அழாதோர் யாருமில்லை எனலாம்.நிறைய படங்களில் சிவாஜி எம்ஜியாருக்கு தாயாக நடித்தவர் கண்ணாம்பா. பல தமிழ் தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் இவர்.சொந்த குரலில் பல பாடல்களும் பாடியுள்ளார்.  சுமார் 25 படங்களை சொந்தமாக தயாரித்தவர்.இவர் கணவர் பெயர் கதரு நாகபூஷணம்.07.05.1964 அன்று தனது 53 வது வயதில் அமரரானார் திருமதி,கண்ணாம்பா அவர்கள்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளைஇலங்கை