தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அறிவித்திருந்த நிலையில் ஆளுநர் அழைப்பு,
நாளை காலை 9.00 மணிக்கு மு. க.ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு விழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் மு. க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது,
மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்
மாலை கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். எஸ்.முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று திமுக இந்த முறை ஆட்சியமைக்கிறது. வரும் 7-ஆம் தேதி முதன்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த தேர்தலில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்தநிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு சென்று விஜயகாந்தை சந்திப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்துக்களையும் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே திமுக வெற்றி குறித்து விஜயகாந்த் தனது டுவிட்டரில், “சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன்‍. தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்