பம்மல் பகுதிகளில் வாகன போக்குவரத்து பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக தமிழக அரசு சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரத்துறை அறிவித்த ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை (25-04-2021) முழு ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியம் இன்றி வெளியே சுற்றும் வாகனங்களை செங்கல் பட்டு மாவட்டம் பம்மல் சங்கர் நகர் S-6 காவல் ஆய்வாளர் மகுதீஸ்வரி ஆலோசனையில் பம்மல் பகுதிகளில் வாகன போக்குவரத்து பரிசோதனை நடைபெற்றது. உதவி ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் உதயகுமார் தலைமை காவலர்கள் இராமன், கண்ணன், மணியரசன், பம்மல் பகுதிகளில் காரணம் இன்றி வெளியே செல்லும் வாகனங்களை தகுந்த ஆதாரம் மருத்துவமனை அவசரம் ஏர்போர்ட் செல்லும் வாகனம், இறுதி சடங்கிற்கு செல்பவர்கள் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கினர்.