சொந்த பந்தங்களுடன் இணைந்து முகூர்த்த தினங்களை அமைத்து மகிழுங்கள்.
ஒரே சமூகம் சார்ந்த,ஒரே உறவினர்களின்,திருமண முகூர்த்தங்களை ஒரே தினத்தில் ஏற்பாடு செய்வதன் வாயிலாக பகையாகும் உறவுகள்.முற்காலத்தில் தற்போதைய ஊடகங்கள் போல் வசதியில்லாத காலங்களிலும் உறவினர்களிடையே நிகழும் சுப நிகழ்வுகளை கடிதப்போக்குவரத்து மூலம் அறிவித்து திருமண முகூர்த்தங்களை அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் முகூர்த்தங்களை நிர்ணயிப்பது வழக்கம்.அத்துடன் உறவுகளுக்கிடையே முகூர்த்தங்களை விட்டுக் கொடுக்கும் சம்ரதாயமும் நடைமுறையில் இருந்தது.
இக்கணிணி யுகத்தில் சில கலாசாரங்கள் முற்றிலும் காற்றில் கரைந்து போனது வருந்துதலுக்குரிய விடயமாகும்.பல ஊடக வசதிகள் இருக்கும் இக்காலத்தில் திருமண முகூர்த்த திகதிகளை உறவுகளிடையே கேட்டறிந்து கொண்டு நிர்ணயம் செய்வது ஒன்றும் தவறான காரியமல்ல,இதனால் உறவினர்களிடையே பகைமை உருவாகும் சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். “எங்கள் இல்ல தேவைக்கு வராமல் நீங்கள் அந்த இல்ல தேவைக்கல்லவா சென்றீர்கள்,எங்கள் வீட்டுத்தேவைக்கு ஏன் வரவில்லை ” என வம்புகள் ஆரம்பித்து, அது நன்றாக இருந்த உறவுகளிடையே பிரிவுகள் ஏற்பட காரணமாக அமைகின்றது. ஒரு திருமண நிகழ்வில் 500 திருமண அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருப்பின்,அது சரிபாதியாக பிரிந்து 250 விருந்தினர்கள் மாத்திரமே வருகை தரும் நிலை ஏற்பட்டு விருந்துபசாரத்தில் போஜனங்களும் வீண் விரயமாகும் சந்தர்ப்பங்களும் உருவாகும்.உற்றார் உறவினர்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு தடவை நிகழக்கூடிய திருமண விழாவில் கலந்து மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்துகள் கூறும் அந்த பொன்னான திருநாளில் எல்லோரும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் சொந்த பந்தங்களுடன் இணைந்து முகூர்த்த தினங்களை அமைத்து மகிழுங்கள்.
எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற பிணக்குகளுக்கு வழி கோலாமல் இருக்க ஆவண செய்யுமாறு பொதுவான எனது கருத்துகளை பதிவு செய்கின்றேன்.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளைஇலங்கை…