திருப்பூரில் 1 லட்சம் பேருக்கு கொரொனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேர் வெற்றிகரமாக கொரொனா தடுப்பூசி போட்டுள்ளனர்
25 இலட்சம் மக்கள் தொகை கொண்ட திருப்பூர் மாவத்தில் இப்போதான், ஒரு லட்சம் பேர் போட்டு இருக்காங்க, மீதி ஆட்கள் தடுப்பூசி போடலாமா வேணாமா, போட்டா ஜுரம் வருமோ, பக்க விளைவுகள் வருமோன்னு தயங்கி தயங்கியே இன்னும் போடாம இருக்கீங்க
இலவசமா கிடைக்கும் தடுப்பூசிய போயி போடாம விட்டீங்கண்ணா அப்றம் கொரொனா வந்த அப்றம் ஆயிரக்கணக்குள தண்டம் அழுக வேண்டி வரும்
அதனால 45 வயசுக்கு மேல இருக்க மக்கள் எல்லாம் தவராம பக்கத்துல இருக்க பெரிய ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போயி தவராம தடுப்பூசி போட்டுக்கோங்க , நீங்க போடுவது மட்டுமில்லாம உங்க உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கும் சொல்லி புரிய வெச்சு தடுப்பூசி போட வெய்யிங்க
செய்தியாளர் சக்திவேல்
தமிழ்மலர் மின்னிதழ்