மலைக்கள்ளன்…

எம்ஜிஆர் #எங்களின் #குலதெய்வம்..நாமக்கல் #கவிஞரின் #பேரன் திரு.H.நடராசன் தமது நினைவுகளைப் பகிர்கிறார்…! மக்கள்திலகத்தின் திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம்…

மலைக்கள்ளன்…

நாமக்கல் கவிஞரின் கதை கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் வெளியாகி அனைத்திலும் வசூலை அள்ளிக்குவித்த திரைப்படம்…

இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பட்சிராஜா ஸ்டூடியோ திரு ஸ்ரீராமுலு நாயுடு அவர்கள்… எனது தாத்தாவிற்கு கொடுப்பதாக உறுதியளித்த தொகையைத் தராமல் ஏமாற்றிவிட்டதால், வருத்தமடைந்து தயாரிப்பாளர் மீது வக்கீல் நோட்டீசு அனுப்புகிறார்..!

சில நாட்கள் கடந்து, சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில் வசிக்கும் தாத்தாவின் இல்லத்திற்கு ஒரு கார் வந்து நிற்கிறது…!

அதில் எம்ஜிஆர் …! எனது தாத்தாவை நோக்கி விறுவிறுவென்று வந்தவர் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து, ‘தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றியது குறித்து வருந்தவேண்டாம்… எனக்கு மலைக்கள்ளன் பேரும் புகழையும் ஈட்டித்தந்தது…அதனால் மறுக்காமல், இதை மறுக்காமல் வாங்கிக்கொள்ளவும் என்று சொல்லி நாங்கள் யாருமே எதிர்பாராத ஒரு பெரும்தொகையை எனது தாத்தாவிடம் அளிக்கிறார்… இப்படி ஒரு கொடைவள்ளல் யாருமுண்டா?

எனது தாத்தா வசித்த வீடு ஒண்டுக்குடித்தனம்… இதையறிந்த எம்ஜிஆர் அரசு சார்பில் ராயப்பேட்டையில் ஒரு வீடு வாங்கி அளித்து கௌரவித்தார்…! இந்தக்காலத்தில் இப்படியுமா???

மற்றுமோர் முக்கிய நினைவு…1965 ல் நடந்த AVM இல்லத்திருமணத்திற்கு என் தாத்தாவும் நானும் சென்றிருந்தோம்… தாத்தா சரியாக நடக்கமுடியாத காரணத்தினால் செல்லப்பேரனான என்னை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வார், எனது தோளில் கையைப் போட்டு தான் நடப்பார்…

அந்த திருமணத்தில் எம்ஜிஆர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்…எனது தாத்தாவைப் பார்த்ததும் அப்படியே எழுந்தவர், கையைக் கழுவிட்டு பலர் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக தாத்தா காலில் விழுந்தார்… நெகிழ்ந்து போன தாத்தாவின் ஜிப்பாவில் பணக்கட்டை யாரும் அறியாவண்ணம் போட்டார்…!

எம்ஜிஆர் மற்றவர்களுக்கு வேண்டுமானால் நடிகர்…ஆனால் எங்களுக்கு கடவுள்…!

நாமக்கல் கவிஞரின் பேரன் தனது உற்ற நண்பராகிய என் அண்ணன் சுந்தர்ராஜன் அவர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ…!

ஆக்கம் : சுந்தர்ராஜன்

தொகுப்பு ஹயாத்

தமிழ்மலர் மின்னிதழ்