பொழிச்சலூர் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்கு பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் (6-04-2021) செவ்வாய் கிழமை நடைபெற்றது. சட்டமன்ற தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைப்படி சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சு மற்றும் சிவகலை செல்வன் அவர்களின் அறிவுரைப்படி பொழிச்சலூர் ஊராட்சி மன்ற செயலர் பொற்கொடி அவர்களின் மேற்பார்வையில் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பொழிச்சலூர் ஊராட்சியில் மிகவும் அழகான முறையில் வண்ண வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி மையம் பொழிச்சலூர் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்குகளை பதிவு செய்வதற்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க வண்ண வண்ண பந்தல்கள் வண்ண வண்ண கோலங்கள் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்டு வெளியில் வந்து நான் வாக்களித்து விட்டேன். நீங்கள் எப்போது என விரலைக் காட்டி வாக்காளர்கள் செல்ஃபி பேனர் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த அலங்காரம் முழுவதும் பொழிச்சலூர் ஊராட்சியில் பணி புரியும் அனைத்து பணியாளர்களும் மிகவும் ஆர்வமுடன் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடனும் எவ்வித சிரமும் இன்றி வாக்குகளை பதிவு செய்தனர்.

தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்
S.முஹம்மது ரவூப்