2036 வரை பதவியில் நீடிப்பதற்கான புதிய மசோதா; ரஷ்ய அதிபர் கையெழுத்து
மாஸ்கோ,
ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் (வயது 68) இருந்து வருகிறார். கடந்த இரு தசாப்தங்களாக பதவியில் நீடித்து வரும் புதின் புதிய சட்ட மசோதா ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளார்.
இதன்படி, அவர் தலா 6 ஆண்டுகள் என கூடுதலாக 2 முறை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால், வருகிற 2036ம் ஆண்டு வரை அவர் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும்.
கடந்த ஆண்டு நடந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த மசோதாவை அவர் முன்மொழிந்து உள்ளார். இதற்கு கடந்த ஜூலையில் மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.
கடந்த மாதம் இந்த புதிய மசோதாவுக்கு உறுப்பினர்களும் ஒப்புதல் வழங்கினர். இதனை தொடர்ந்து, வருகிற 2024ம் ஆண்டு அவரது பதவி காலம் முடிவடைந்த உடன் மீண்டும் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட அனுமதி கிடைத்து உள்ளது.
செய்தியாளர் ரஹ்மான்
தமிழ்மலர் மின்னிதழ்