நீசமான கிரகத்தின் திசை நன்மை செய்யுமா? அல்லது செய்யாதா?

ஒரு கிரகம் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தால், அதனால் பயன் இல்லை என்கிறார்கள். அதே கிரகத்தின் மகா திசை எப்படி இருக்கும்?

ஒரு உதாரண ஜாதகம்

ஜாதகர் 1969 ஆம் ஆண்டு பிறந்தவர். சிம்ம லக்கின ஜாதகம்.
அவிட்ட நட்சத்திரம்.

  1. லக்கினாதிபதி சூரியன் 11ல்
  2. இரண்டில் குரு, கேதுவுடன்
  3. சிம்ம லக்கினத்திற்கு யோக காரகனான செவ்வாய் கேந்திரத்தில் (4ல்).
  4. விரையாதிபதி சந்திரன் ஏழில் அமர்ந்து லக்கினத்தை பார்க்கிறார்.
  5. ஒன்பதாம் இடத்தில் (பாக்கியஸ்தானத்தில்)
    சனி நீசம்.
  6. பத்தில் சுக்கிரனும், புதனும்.

ஜாதகனின் 36ஆவது வயதில் சனி மகா திசை ஆரம்பம். அந்தத் திசை ஜாதகனுக்கு நன்மை செய்யுமா? அல்லது கேடு செய்யுமா?
மேலும் ஜாதகனுக்கு அந்தத் திசையில் வீடு வாங்கும் பாக்கியம் உள்ளதா?

சனி நீசமானாலும் திரிகோண ஸ்தானத்தில் (9ல்) உள்ளார். அத்துடன் வேறு தீய கிரகங்களின் கூட்டணியோ பார்வையோ இல்லாமல் இருக்கிறார். ஆகவே அவர் நன்மையைச் செய்வார். ஒன்பதாம் இடத்திற்கு அப்படி ஒரு வலிமை.

அவிட்ட நட்சத்திரம்,
முதலில் செவ்வாய் திசை. இரண்டாவது ராகு திசை. மூன்றாவது குரு திசை.
நான்காவது சனி திசையாகும்.
ஜோதிடத்தை வகுத்த முனிவர்களின் கணக்குப்படி நான்காவதாக வரும் சனி திசை நன்மையைச் செய்யாது.

இரண்டு ஜோதிட விதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், பெரிய அளவில் நன்மைகள் இல்லாவிட்டாலும், கெடுதல் இருக்காது. அதாவது சராசரியாக இருக்கும். பயப்படத் தேவையில்லை.

சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயானவர்
இடம், வீடுகளுக்கு உரிய நான்காம் வீட்டில் இருப்பதால், ஜாதகனுக்கு வீடு வாங்கும் பாக்கியம் உண்டு.

செவ்வாய் சுக்கிரனின் வலுவான பார்வையுடன் இருப்பதால், சனி திசை சுக்கிரபுத்தியில் ஜாதகனின் அந்த ஆசை நிறைவேறும்.

ஜோதிட ஆய்வில்
Astro செல்வராஜ்
Cell : 9842457912