சென்னையில் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை.  6 ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமலாகும் என்ற தகவலை நம்ப வேண்டாம். வரும் 7 ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். 

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 32 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வருத்தமளிக்கிறது. 

சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். அத்தியவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்றார்.

செய்தியாளர் ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்