பாவேந்தரும் தமிழும் – தொடர் – 61

01.04.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
இயற்கையை
உருவகமாக
உவமையினை
உள்ளத்துள்நிறுத்தி
தொடர்ந்துஎழுதி
தமிழை
தமிழினைப்புதிய
புல்வெளிகளுக்கு
அழைத்துச்சென்றவர்
பாவேந்தர்பாரதிதாசன்.
?
அழகு!ஆசை!ஓசை!
பூசை!உணர்வு!உரிமை
புலமை!முதலிய
காரணங்களுக்குப்
பாடுவோர்காசுக்காகப்
பாடாமல்
சமூகநீதிக்காக
அறத்திற்காக
உண்மையை
எழுதினால்காலத்தைவென்று/
வாழ்வார்கள்..
ஒன்றேகடவுட்கொள்கை
பாடினாலும்சமூகநீதி
முன்நிற்கவேண்டும்..
?
சமூகஅநீதியை
(ஏமாந்தகாலத்தில்
ஏற்றம்கொண்டோன்
புலிவேசம்
போடுகின்றான்
பொதுமக்கட்குப்
புல்லளவுமதிப்பேணும்
தருகின்றானா?)என்று
புரட்சிக்கவியில்
பாடுகிறார்.
?
பாவேந்தர்
எங்குமேதம்பாடல்களில்
கருத்துகளை
செயற்கையாகவலிந்து
பாடுவதில்லை..
எடுத்துக்காட்டாக
அழகின்சிரிப்பு
நூலினை
அகத்தூண்டுதலால்
படைத்தார்..
எடுத்துவா!எழுது
கோலை!எல்லா
இடங்களிலும்
இளம்புலிகளேஇன்பம்
பரப்பிடப்புறப்படுவோம்.
சோர்ந்துபோய்படுக்க
மாட்டேன்..தூக்கத்தில்
புலம்பமாட்டேன்நான்?
தோல்வியைப்எந்தக்
காலத்திலும்நான்பாட
மாட்டேன்என்று
சூளுரைக்கிறார்…
எவ்வளவு?துன்பம்வரினும்
உண்மைதனைச்
உரத்துச்சொல்லுவேன்!
?
அனைவருக்கும்
இலவசக்கல்வி
கற்பிக்கப்படவேண்டும்
என்பதை
(எளிமையினால்ஒரு
தமிழன்படிப்பில்லை
என்றால்இங்குள்ளோர்எல்லோரும்
நாணிடவும்வேண்டும்.)
என்றும்…………………………………….
உலகியலின்
அடங்கலுக்கும்
துறைதோறும்நூற்கள்
ஒருத்தர்தயை
இல்லாமல்ஊரறிவும்
தமிழில்
சலசலவென
எவ்விடத்தும்
பாய்ச்சிடவேவேண்டும்..
தமிழொளியை
மதங்களிலே
சாய்க்காமைவேண்டும்)
மதங்களைஅரசியலில்
கல்வியில்கலந்து
விடாதீர்கள்..
பகுத்தறிவோடு
செயல்பட்டால்யாரிமும்
மண்டியிடத்
தேவையில்லை…!!!
(பா.தா.கவிதைகள்84)
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்